வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பொதுக்கூட்டம்!

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவியினை பொலீசார் கைதுசெய்துள்ளமையினை கண்டித்து பொலீசாரை கண்டித்து,பொலீசாரின் அடாவடித்தனத்தினை கண்டித்து எதிர்வரும் 08.01.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக பாரிய ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

06.01.2024 இன்று முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைதெரிவித்துள்ளார்
இதேவேளை எதிர்வருத் திங்கட் கிழமை முல்லைத்தீவு மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது காலை 11.00 மணியளவில் வற்றாப்பளை வளாகத்தில் ஒன்று கூடி பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எங்களுக்கான முடிவுகளை எடுக்கவேண்டும். அரசாங்கத்தின் பல நெருக்கடிக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளை இல்லாமல் செய்வதற்கான பல வழிகளில் முனைகின்றார்கள்.

இதனைதடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் எங்களுக்கான முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும் இதற்காக நாங்கள்  ஒன்று கூடுவதற்கு இடங்கள் கேட்டால் புலனாய்வுத்துறைகளால் அச்சுறுத்தப்படுகின்றார்கள் இடம் கொடுக்காதீர்கள் சாப்பாடு கொடுக்காதீர்கள் என்று
இந்த நிலையில் நாங்கள் யாரிடமும்இடம் கேட்க போகாமல் நாங்களே முடிவெடுத்து எங்களுக்கான இடத்தினைநாங்கள் தெரிவு செய்துள்ளோம் வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது அவரின் முன்னால் தான் எங்கள் உறவுளை நாங்கள் கொடுத்தோம்.

அம்மாள்ஆச்சியின் சாட்சியாக நாங்கள் அந்த இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றினை கூட உள்ளோம் இதில் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.
எதிர்வரும் 08.01.2024 காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரியஒருபோராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளோம் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவியினை பொலீசார் கைதுசெய்துள்ளமையினை கண்டித்து பொலீசாரை கண்டித்து,பொலீசாரின் அடாவடித்தனத்தினை கண்டித்து இந்த போராட்டத்தினை நடத்தவுள்ளோம் விலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவுகளை பொலீசார் அடக்குவதையும் நிறுத்தவேண்டும் என்றும் இந்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளோம் இதில் தேசியத்திற்காக பயணிப்பவர்கள்,அரசியல் பிரதிநிதிகள்,அமைப்புக்கள் என அனைவரும் அணிதிரளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar