Monday, April 28, 2025
HomeUncategorizedஉடையார் கட்டில் சிறப்புற நடைபெற்ற தந்தைசெல்வாவின் ஜனன தினம்!

உடையார் கட்டில் சிறப்புற நடைபெற்ற தந்தைசெல்வாவின் ஜனன தினம்!

தமிழ்த் தேசிய தந்தை, ஈழத்து காந்தி என உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்ற S.J.V செல்வநாயகம் தந்தை செல்வா அவர்களின் 125வது ஜனன தினம் 31.03.2023 இன்றைய தினம் மாலை 4மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தருமான ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற ஜனன தின விழாவில் முதலில் விருந்தினர்கள் கௌரவமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டனர் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி தமிழர்களின் விடுதலைக்காக பாடுபட்டு வீரகாவியமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து மாணவர்களால் பாடப்பட்டது.தந்தையின் 125வது ஜனன தின விழாவில் பிரதம விருந்தினராக சட்டத்தரணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி ஜயாவும்

கௌரவ விருந்தினர்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகன், உடையார்கட்டு புனித யூதா ததேயு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் மற்றும் கூட்டணியின் முக்கியஸ்தர்களான சி.கனகராசா/அருமை ,பா.நிதர்சன்,சூ.இராஜேஸ்குமார் இன்னும் பல முக்கியஸ்தர்களும் சுமார் 350க்கு மேற்பட்ட பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஜனன தின விழாவில் தந்தை செல்வநாயகம் ஐயாவின் பிறப்பு பொதுவாழ்வை தமிழ் மக்களுக்காக அவர் அர்ப்பணித்த புனிதத்துவம் எனும் தலைப்பில் சிறப்புரைகளை விருந்தினர்களான வீ.ஆனந்த சங்கரி மற்றும் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஈழத்து கவிக்குயில் வி.அபிவர்மா மற்றும் கூட்டணியின் முக்கியஸ்தர் அருமை மாமா எனப்படும் கனகராசா ஐயாவும் தந்தை செல்வநாயகத்தின் சரித்திர முக்கியத்துவம் தொடர்பாக கவிதை வடித்தனர்..

தந்தை செல்வநாயகம் ஐயாவின் 125வது பிறந்தநாள் நிறைவு தின நிகழ்வுகளுக்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட அமெரிக்க நாடுகளுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் றோய் சமாதானம் அவர்களே செய்திருந்தார்.

தொடர்ந்து 125வது ஜனன தின சிறப்பு “கேக்” வெட்டப்பட்டு அனைவரும் உண்டு மகிழ்ந்ததுடன் தந்தை செல்வநாயகம் ஐயாவின் 125வது ஜனன தின சிறப்பம்சமாக பல மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி ஜயா மற்றும் நிகழ்வின் தலைவர் ஆறுமுகம் ஜோன்சன் அவர்களாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்களாலும் வழங்கி வைக்கப்பட்டு தந்தை செல்வநாயகம் ஐயாவின் 125வது ஜனன தின விழா இனிதே நிறைவு பெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments