Monday, April 28, 2025
HomeUncategorizedசிரேஸ்ட இடைநிலைப்பிரிவு பகுதி தலைவராக கடமை புரிந்த ஆசியருக்கு மணிவிழா!

சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு பகுதி தலைவராக கடமை புரிந்த ஆசியருக்கு மணிவிழா!

குமுழமுனை மகாவித்தியாலய சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு  பகுதி தலைவராக கடமை புரிந்த ஆசியருக்கு கடந்த (31.03.2023) சேவை நலன் பாராட்டு விழாவும், மணிவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 

முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு  பகுதி தலைவராகவும், தமிழ் பாட ஆசிரியராகவும் கடமையாற்றிய  பாலநாதன் நகுலேஸ்வரி ஆசிரியையின் 60ஆவது ஆண்டு சேவை பூர்த்தி நிறைவு நாளில் அவரது சேவையை பாராட்டும் நோக்குடன் சேவை நலன் பாராட்டு விழாவும், மணிவிழாவும் குமுழமுனை மகாவித்தியாலயத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

பாடசாலை அதிபர் க.ஜெயவீரசிங்கம் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் முல்லை வலய தமிழ் பாட உதவிகல்வி பணிப்பாளர் த.மதியழகன்,  குமுழமுனை மகாவித்தியாலய முன்னைநாள் அதிபர்களான சி.இராஜேஸ்வரன், ந.விஜயரட்ணம், முல்லை வலய வளவாளர் பீதாம்பரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments