Sunday, May 4, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்த நபர் கைது!

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்த நபர் கைது!

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்த நபர் கைது!

முல்லைத்தீவில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து நகர்ந்த  நபர் ஒருவரை மக்கள் பிடித்து மாங்குளம் பொலீசில் ஒப்படைத்துள்ளார்கள்
இந்த சம்பவம் 08.12.2023 அன்று இடம்பெற்றுள்ளது.

மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபரே மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

08.12.23 நேற்று மதியம் 02 மணியளவில் மாங்குளம் நகரப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு சென்ற ஒருவர் கிந்துஜனின் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனக்கூறி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பிடித்துள்ளார். அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சாரதி எதற்காக செல்கிறீர்கள் என கேட்டபோது அவருக்கு பரிசு கொடுக்க வேண்டுமெனக்கூறியுள்ளார்.

சற்று நேரத்தில் அவர் தன்னை உருமறைப்பதற்காக ஒட்டியிருந்த தாடி உரிந்துள்ளது. இதையடுத்து அவர் தப்பியோடி வீதியால் சென்ற இ.போ.ச பேருந்தில் ஏறமுயற்சித்த போது அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது அவரிடமிருந்து ஒன்றரை அடி நீள வாள், கயிறு மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவரை விசாரித்ததில் அவர் தமிழ்தேசியமக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் பிறேம் மற்றும் கிந்துஜனை கொல்லவந்ததாக கூறியுள்ளார். அதனையடுத்து அவர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பமவ் தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர் தி.கிந்துஜன்அவர்களினால் மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம்தொடர்பில் மாங்குளம் பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments