முல்லைதீவில் கடல் வளர்த்தினையும் மீனவர்களையும் பாதுகாக்குமாறு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
இன்று காலை 10.45 தொடக்கம் 11.30 வரை நடைபெற்ற கவனயீர்பில்
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
முல்லைதீவு சிலாவத்தை சந்தியிலிருந்து மிதிவண்டி மற்றும் உந்துருளிகளில் பதாதைகளை தாங்கி கவனயீர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக நகர்ந்து முகத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்துள்ளார்கள்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஒன்று கூடியவர்கள் அங்கு தங்கள் கவனயீர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்
எமது கடல் எமது வளம், இலங்கை அரசே எமது கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடை செய், அத்து மீறிய இந்திய மீனவரின் வருகையை தடை செய், உள்ளிட்ட வாசகங்களை எழுதியவறான பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள்