அதிபர் நியமனம் பெற்றவர்களுக்கான செயலமர்வு துணுக்காயிலிருந்து வவுனியாவிற்கு இடமாற்றம்!
புதிதாக அதிபர் தர சேவை 03க்கு நியமனம் பெற்றவர்களுக்கான செயலமர்வு வவுனியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
இந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் புதிதாக அதிபர் தர சேவை 3ற்கு உள்வாங்கப்பட்டவர்களுக்கான 21 நாட்களை கொண்ட செயலமர்வு துணுக்காய் கல்வி வலையத்தில் இடம்பெற்றிருந்தது
குறித்த செயலமர்வுக்காக வடமாகணத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அதிபர் தரத்திற்கு தெரிவான 102 பேர் கலந்து கொண்டிருந்தனர்
2 நாள் செயலமர்வுகள் இடம்பெற்றிருந்ததாகவும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்களுக்கான அனைத்து சகல வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கின்றது
திடீரென மாகாண கல்வி பணிப்பாளர் அவர்களினால் குறித்த இந்த செயலமர்வு இடம்பெறும் பகுதி போக்குவரத்து பிரச்சனைகளை காரணம் காட்டி வவுனயா தெற்கு கல்வி வலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
துணுக்காய் கல்வி வலையம் ஏனைய இடங்களுக்கு மத்திய பிரதேசமாக இருக்கின்றது என்பதனால் தான் செயலமர்வு இங்கே வைக்கப்பட்டிருக்கின்றது
2ம் நாள் செயலமர்வுகள் துணுக்காய் வலையத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அந்த செயலமர்வுகள் யாவும் வவுனியா தெற்கு கல்வி வலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது
இதேவேளை மாங்குளம் கல்வி வலையமானது வெளி மாவட்ட ஆசிரியர்கள் வருவதற்கு பின்னடிக்கும் கஷ்ட பிரதேசம் எனும் வகையிலும், 29 பாடசாலை அதிபர்களுக்கான வெற்றிடம் காணப்படுகின்ற பொழுதும் , குறித்த கல்வி வலையத்தில் செயலமர்வுகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதி சகல வளத்துடனும் இயங்கும் பாடசாலைகளை கொண்டுள்ளது என்ற நோக்கத்திலாவது வெளியிட உத்தியோகத்தர்கள் வருகைதர நம்பிக்கை கொடுக்கும் ஒரு செயலமர்வாக குறித்த செயலமர்வு இருந்திருக்கும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்
இனிவரும் காலங்களிலாவது அதிகஸ்ட பிரதேச கல்வி வலையத்திற்குற்பட்ட பாடசாலைகளின் நிலைமையினை கருத்திற்கொண்டு மாகாண கல்வி பணிப்பாளர் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்