முள்ளியவளையில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு!


மாவீரர் நாளினை முன்னிட்டு 21.11.2023 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

150 மாவீரர் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
தாயக மற்றும் புலம்பெயர்ந்தோர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வானது முன்னதாக மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் பொதுப்படம் மற்றும் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
இதன் போது மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மாவீரர்கள் நினைவாக தென்னம்பிள்ளை கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *