வெள்ளத்தில் மூழ்கிய புதுக்குடியிருப்பு நகரம்-8 குடும்பங்கள் பாதிப்பு பல வணிக நிலையங்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் !
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மழை வெள்ளத்தினால் 8 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்
நேற்றிரவு( 16)பெய்த கடும் மழையினால் புதுக் குடியிருப்பு நகர்ப்பகுதி உள்ளிட்ட மக்களின் குடியிருப்பு பகுதிகள் வணிக நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதுடன் பாடசாலை ஒன்றுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் அந்த பாடசாலை இன்று இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுக்குடியிருப்புகிழக்கு,மேற்கு ,ஆனந்தபுரம் கோம்பாவில் போன்ற கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முதன்மை வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் கிராமங்களில் உள்ள கிராம வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
நகர் பகுதியில் உள்ள பாடசாலையான ஸ்ரீ சுப்பிரமணிய வித்யாசாலை இதனால் இயங்கவில்லை. பாடசாலை வளாகத்துக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் திரும்பி வீடு சென்றுள்ளார்கள்
ஆனந்தபுரம் கிராமத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் வேணாவில் பகுதியில் சிறிய குளம் நீர் நிரம்பி ஓடி வருவதால் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டு அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள்
பிரதேச சபையினர் கனரக இயந்திரங்களைக் கொண்டு நகரில் காணப்படும் வடிகால்களை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்
பாதிக்கப்பட்ட வணிக நிலையங்கள் தொடர்பான விவரங்களை கிராம சேவகர் ஊடாக திரட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்
தொடர்ந்தும் மழை எதிர்பார்க்கப்படுவதால் அதனை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருப்பதாக இது குடியிருப்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார் இதேவேளை பிரதேச சபையினரால் கனரக இயந்திரம் கொண்டு வடிகால்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது மேலதிகமாக மற்றும் ஒரு கனரக இயந்திரம் வாடகைக்கு அமர்த்தப்பட்டு மாவட்ட செயலாளரின் எரிபொருள் எரிபொருள் உதவி வளங்களுடன் வடிகால்கள் சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர்
நகரத்தில் உள்ள மக்களின் மற்றும் வணிக நிலையை உரிமையாளர்களின் புறப்பட்ட செயலாலே இவ்வாறான நடவடிக்கை இடம் பெற்றவர்களாக தெரிவித்துள்ளார் வணிக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு முன்னால் உள்ள வடிகால்களை அதன் உரிமையாளர்கள் சரியாகப் பேணி சுத்தம் செய்திருந்தால் மழை வெள்ளம் வடிந்து ஓட முடியாத நிலை ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்த அவர் தற்போது வெள்ளம் அனைத்தும் தணிந்துள்ளதுடன் தாழ்ந்த பிரதேசங்களில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவித்துள்ளார்