தானாக உடைப்பெடுத்த நந்திக்கடல் நீர் ஏரி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் மழையினால் நந்திக்கடலுக்கான நீர்வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளதை தொடர்ந்து வெட்டுவாகல் ஊடகான நந்திக்கடல் முகத்துவாரம் தானக உடைப்பெடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு குளம் வான்பாய்கின்ற நிலையில் முத்தையன் கட்டு குளத்தின் கீழான பேராற்று நீரும் நந்திக்கடலை சென்றடைந்துகொண்டிருக்கின்றது.

அதிகளவான மழைவீழ்ச்சியால் நந்திக்கடலுக்கான மழைவெள்ள நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டுள்ளதை தொடர்ந்து வெட்டுவாகல் பாலம் நிரப்பிய நிலையில் வெட்டுவாகல் முகத்துவாராம் நேற்று இரவு தான உடைப்பெடுத்து முல்லைத்தீவு பெருங்கடலுடன் இணைந்துள்ளது.

கடந்த காலங்களில் நந்திக்கடல் நிரம்பிய நிலை காணப்பட்டால் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக வெட்டுவாகல் மீன்பிடி சங்கங்களின் ஆலோசனை மற்றம் கமக்கார அமைப்பினருடன் கூட்டம் நடத்தியே முகத்துவாரம் வெட்டுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வெட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tagged in :

Admin Avatar