Friday, May 9, 2025
HomeUncategorizedதண்ணீரூற்றில் முதன்மை வணிக நிலையம் ஒன்றில் பாரிய கொள்ளை!

தண்ணீரூற்றில் முதன்மை வணிக நிலையம் ஒன்றில் பாரிய கொள்ளை!

முல்லைத்தீவு தண்ணீரூற்று நகர்பகுதியில் அமைந்துள்ள பாரியளவிலான வணிக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கடந்த 15.11.2023 அன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கடந்த 15.11.2023 அன்று வணிக நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கொள்ளையர்கள் கதவின் பூட்டினை உடைத்து கடைக்குள் நுளைந்துள்ளார்கள்.

கடைக்குள் நுளைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 19 பண்டல் சிகரட் பெட்டிகளை கொள்ளையடித்துள்ளதுடன் கடைக்குள் குபேரன் சிலைக்குள் போடப்பட்ட சுமார் 5 இலட்சம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்கள்.
சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுதியான பொருட்கள் பணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளரால் கடந்த 16.11.2023 அன்று முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது
இந்த முறைப்பாட்டிற்கு அமைய முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments