முருகனின் படைத்தளபதிகளுடன் நடைபெற்ற சூரன்போர்!


தமிழ் கடவுளான முருகப்பெருமானை வேண்டி அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும் இந்த விரதம் ஆறு நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு இறுதி நிகழ்வான சூரசம்கார நிகழ்வு 18.11.2023 அன்று முருகன் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலய்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்கார நிழக்வு 18.11.23 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.

முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்று மங்கள் வாத்தியங்கள் முழங்க உள்வீதி வலம் வந்து பக்த்தர்களின் அரோகரா கோசத்துடன் கடாய் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து சூரனை வதம் செய்து பக்த்தர்களுக்கு அருள்பாலிகத்து காட்சி கொடுத்துள்ளார்


சிறப்பாக முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து முருகனின் படைத்தளபதிகளாகன நவவீரர்கள் உடை அலங்காரத்துடன் முருகனின் படைவீரர்கள் நாரதர் உள்ளிட்டவர்கள் முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயத்தில் முருகனின் படைத்தளபதிகளாக வலம் வரும் காட்சி சிறப்பாக அமைந்துள்ளது.

இதில் பெருமளவான பக்த்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்துள்ளார்கள்
முள்ளியவளை ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலயத்தில் ஆண்டு தோறும் இளைஞர்களால் மிக சிறப்பாக சூரசம்காரம் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *