Monday, February 16, 2026
HomeUncategorizedகற்பூரப்புல் இந்து மயான வீதி மற்றும் மயானம் என்பன சுத்தம் செய்யும் பணி!

கற்பூரப்புல் இந்து மயான வீதி மற்றும் மயானம் என்பன சுத்தம் செய்யும் பணி!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளியவளை கிழக்கு அபிவிருத்தி சங்கத்தின் எல்லைக்குட்பட்ட கற்பூரப்புல் இந்து மயானத்திற்கு செல்லும் வீதி மற்றும் மயானம் என்பன பிரதேச சபையின் உதவியுடன் புனரமைப்பு பணிகள் செய்துவைக்கப்பட்டுள்ளன.

மழைகாலம் தொடங்கியுள்ளதால் குறித்த மயானத்திற்கு செல்லும் வீதி பற்றைக்காடுகளாக காணப்படுவதுடன் மயானமும் பற்றைகளால் காணப்படுவதை கருத்தில் கொண்டு முள்ளியவளை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையுடன் சீர் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தங்கள் எல்லைக்கு உட்பட்ட வீதிகள் மற்றும் வடிகால் அமைப்புக்களை பிரதேச சபையின் இயந்திரங்கள்கொண்டு சீர்செய்யும் போது கிராமங்கள் அழகு பெறும்.

பிரதேச சபைக்கு சொந்தமான பல வீதிகள் இன்றும் சரியான வடிகால் அமைப்பு இல்லாத நிலையில் காணப்படுகின்றன வீதிகள் புனரமைக்கப்படாத நிலை காணப்படுகின்றது அவற்றினையும் பிரதேச சபையினர் சீர்செய்து இனிவரப்போகும் மழைகாலத்தினை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments