இன்று இரவு இடிமின்னலுடன் மழை!

20 மாவட்டங்களுக்கு கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாயங்கள் ஆரம்ப எச்சரிக்கை மையம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

எனவே, பொதுமக்கள் மின்னலிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்கள் பின்வருமாறு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மாத்தளை, கண்டி, கம்பஹா, கேகாலை, நுவரெலியா, பதுளை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மொனராகலை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை.

இடியுடன் கூடிய மழையின் போது வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், திறந்தவெளி நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் உலாவுவதைத் தவிர்க்குமாறும், இடியுடன் கூடிய மழையின் போது கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதுடன்  மக்களை மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம் என்று எச்சரிக்கிறது.

மேலும், சைக்கிள், டிராக்டர், படகு போன்ற திறந்தவெளி வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மரங்கள் மற்றும் மின்கம்பிகள் விழும் நிலையில் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tagged in :

Admin Avatar