வயோதிப பாட்டியின் கொலை முன்னால் மாகாணசபை உறுப்பினரின் மகள் கைது!

மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால்,   வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) எனும் மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். அவரது உடற்கூற்று பரிசோதனையின் போது சந்தேகங்கள் இருந்தமையால்  அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் 32 மற்றும் 28 வயதுடைய தம்பதியினரையும் , மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 19 வயது யுவதியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதில் வடமாகாணசபையின் எதிர்கட்சினை சேர்ந்த முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் மகளும் அடங்குகின்றார் (அகிலதாஸ்) இவரின் மகளே மூதாட்டியினை கழுத்து நெரித்து கொலைசெய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை இன்று 10.11.23 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you