Monday, May 12, 2025
HomeUncategorizedவிசுவமடு பகுதியில் நூதன முறையில் பணம் அபகரிப்பு!

விசுவமடு பகுதியில் நூதன முறையில் பணம் அபகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்றையதினம் இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், நீங்கள் ஒப்படைத்த பணம் மீண்டும் உங்களது கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு வேலைப்பழு அதிகம் காணப்படுவதால் இன்றை கணக்கினை முடிக்க வேண்டும் எனவும் ஆகையால் மக்களிடம் காசை அறவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சமுர்த்தி உத்தியோகத்தரின் கட்டளைக்கமைவாகவே தான் இப்பகுதியில் மக்களின் காசுகளை பெற்று வருவதாக தெரிவித்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி உத்தியோகத்தரிடம் கதைத்துவிட்டு சொல்கிறேன் என தொலைபோசியில் உரையாடுவது போல் பாசாங்கு செய்துள்ளனர். மீண்டும் அவரிடம் வந்து அம்மா சரி உங்களிடம் இருக்கின்ற 5000 ரூபாய் பணத்தை தாருங்கள் மிகுதி பணத்தை சமுர்தியில் எடுத்து நாளை தந்தால் மாத்திரமே உங்களது 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டில் இருந்த முதியவரும் சரி நாளைக்கு உங்களது பணத்தை பெற்று தருவதாக தெரிவித்து 5000 ரூபாய் பணத்தை ஒப்படைத்துள்ளார். இது போன்று இவர்கள் பலரிடம் பணம் வசூலித்து சென்று உள்ளனர்.

இது தொடர்பாக சமுர்த்தி உத்தியோகிரிடம் வினவிய போது, இது தொடர்பாக தமக்கு எந்தவித தகவலும் தெரியாது எனவும், இது தொடர்பாக தமக்கு எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.எனவே மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments