வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய புதிய நிர்வாகத்தெரிவு!

இலங்கை திருநாட்டின் பிரசித்தி பெற்ற உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதங்கள் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான புதிய நிர்வாக தெரிவிக்கான வாக்கெடுப்பு நாளை 04.11.2023 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கடந்த காலத்தில் நிர்வகித்து வந்த நிர்வாகிகளால் ஆலயத்தின் நிதிபரிமாற்றம் மற்றும் சொத்துக்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பிணக்கு காணப்பட்ட நிலையில் நீதிமன்றில் வழக்காளிகளால் வழக்கு தொடரப்பட்டு வழக்காடப்பட்டு வந்துள்ளது

இந்த நிலையில் வழக்காளிகள் கேட்டுக்கொண்டதற்கு அமைய ஆலய நிர்வாக பொறுப்பு கடந்த சித்திரை மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட செயலக கணக்காளரின் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் மாவட்ட செயலக கணக்காளரினால் ஆலயத்தின் சொத்து மதிப்பீடுகள் இருப்புக்கள் வங்கி கணக்குகள் என அனைத்து விபரங்களும் எடுக்கப்பட்டு அதனை தொடர்ந்து புதிய நிர்வாக தெரிவிற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு உரிதான் வாக்காளர்களாக 8 கிராமத்தினை சேர்ந்த மக்களை பதிவுசெய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை,வற்றாப்பளை,தண்ணீரூற்று,

குமுழமுனை,முல்லைத்தீவு,

வட்டுவாகல்-பொக்கணை,

செம்மலை,அளம்பில் ஆகிய எட்டு கிராமங்களில் இருந்து வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள்

ஆலயத்தின் நிதந்தர பரம்பரை உறுப்பினர்களாக 11 பேர் காணப்படுவார்கள் வாக்காளர்களின் வாக்குகளால் 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்
முள்ளியவளையில் 4பேர்,வற்றாப்பளையில் 4பேர்,தண்ணீரூற்றில்4பேர்,

முல்லைத்தீவில்3 பேர்,

குமுழமுனையில் 2 பேர் வட்டுவாகல்-பொக்கணையில் ஒருவரும்,அளம்பில் ஒருவரும்,செம்மலையில் ஒருவருமாக இருபது பேர் தெரிவுசெய்யப்படுவார்கள்.

கிராமங்களில் இருந்து வாக்களார்கள் நாளை ஆலய வளாகத்திற்கு சென்று வாக்களிக்கவுள்ளார்கள் ஒரு வாக்காளர் ஒருவரை மாத்திரம் தெரிவு செய்யலாம் என்ற நிபந்தனைக்கு அமைய வாக்களிக்கப்படவுள்ளது.

வாக்களிக்கப்பட்ட பின்னர் நிர்வாகத்தில் அங்கம்வகிக்கும் 31 பேரும் இணைந்துதான் தலைவர் செயலாளர்,பொருளாளரை தெரிவு செய்து ஆலய நிர்வாகம் இயங்கும் இவை அனைத்தினையும் முல்லைத்தீவு மாவட்ட செயலக கணக்காளர் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு செய்து புதிய நிர்வாகத்திடம் ஆலயத்தின் இருப்புக்கள் வரவுசெலவு,சொத்துக்கள் பற்றிய முழுமையா பொறுப்பினை கையளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tagged in :

Admin Avatar

More for you