Friday, May 9, 2025
HomeUncategorizedபணிக்கு திரும்பிய முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள்!

பணிக்கு திரும்பிய முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள்!

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 02.10.2023 அன்று   ஆரம்பித்த காலவரையறையின்றிய   தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு 10.10.23 அன்று மாவட்ட சட்டத்தரணிகள் பணிக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

09.10.23 அன்று நாடு தழுவிய சட்டத்தரணிகள் கொழும்பில் உச்ச நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்த  நிலையில் கொழும்பில் நடைபெற்ற கவனீர்;ப்பு போராட்டத்தின் பின்னர் நீதிபதிகளின்கோரிக்கைக்கு நீதி அமைச்சு மற்றும் அரசாங்கம் ஒரு முடிவினை அறிவிக்கவேண்டும் இதற்கான காலக்கெடுவாக ஒருவார இடைவெளியின் பின்னர் சட்டத்தரணிகளின் போராட்டங்கள் கவனயீர்ப்புக்கள் வடிவங்கள் மாற்றப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்க படலாம் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் ஆகியனவற்றில் மக்களின் வழக்குகளில் சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments