கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விக்கு நிதி இல்லை கையை விரித்த மாவட்ட செயலகம்!

முல்லைத்தீவ மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மனித புதைக்குழி அகழ்வு தொடர்பில் அதனை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு நிதி இல்லைனா மாவட்ட செயலகம் கைவிரித்து உள்ளதாக அகழ்வு பணி குழு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள்; செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒன்பது நாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 17 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
17 மனித உடலங்கள் அதன் எச்சங்கள் தடயங்கள் என்பன மீட்கப்பட்ட நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரப் பகுதியில் ஏனைய அகழ் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அகழ்வு பணிகள் கடந்த 15ஆம் தேதி உடன் தற்காலிகமாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது இதனைத் தொடர்ந்து மேலும் குறித்த பகுதியில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள உள்ளதாக அகழ்வு பணியின் குழு தலைவர் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மாவட்ட செயலக கணக்காய்வு பகுதியில் அதற்கான நிதி எதுவும் இல்லை என அறிவித்துள்ளதாக அகழ்வு பணி குழுவின் தலைவர் சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணி நிறைவடைந்த நிலையில் அங்கு குறித்த புதைகுழியின் பாதுகாப்பிற்காக கொட்டகை அமைக்கப்படவேண்டும் என்றும் மழைக்காலங்களில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா அவர்கள் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பினையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

Tagged in :

Admin Avatar