வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே சிவலிங்கத்தினை வைத்து மக்களுக்கு வழிபாடுவதற்கு ஏற்றவகையில் செயற்பட்டு வரும் சிவன் அடியவர்களே தொன்மைகொண்ட பழமைபொருந்திய வெடுக்குநாறி ஆதிலீங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நடந்தது உங்களுக்கு தெரியுமா ஏன் இவ்வாறு புராதான தொன்மையுள்ள இடங்களை விட்டுவிட்டு வீதிகளிலும் சந்துகளிலும் சிவனை நிறுவி சிவதாண்டவம் ஆடுகின்றீர்கள். (VOICEOFMULLAI)
தமிழர்கள் வாழ்ந்ததற்கான நாகர்கர் வழிபட்டதற்கான ஆதாரங்கள் வன்னில் பல இடங்களில் காணப்படுகின்றன அவற்றை காக்க தவறும் பட்சத்தில் போதிதர்மரின் ஆதிக்கத்தினை தடுத்துவிட முடியாது.
இன்று வடக்கில் உள்ள பல்வேறு இடங்களில் மதப்பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ளது இவற்றுக்கெல்லாம் யார் காரணம் என தமிழ்மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டம் ,வவுனியா மாவட்டங்களில் இவ்வாறான மதரீதியிலான ஆக்கிரமிப்பு தொடர்ந்து வண்ணமுள்ளது இந்த மாவட்டங்களில் மன்னர்கள் வாழ்ந்தார்கள் நகவழிபாடுகள் நடைபெற்றன என்பதற்கான ஆதாரங்கள் பல இருந்தும் இன்று புதையல் தோண்டுபவர்களால் தோண்டி எடுக்கப்பட்டு அவைவ விற்பனையாகி வருகின்றது இதனால் அந்த ஆதார சிலைகள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக குருந்தூர்மலையில்,முத்தையன்கட்டு கொய்யாக்குளம், ஒட்சுட்டான் தட்டையர்மலை,கொண்டமடு,கோடாலிகல்லு,வரிவண்ணான், பனங்காமம்,அம்பகாமம்,நெட்டாங்கண்டல்,வவுனியா செட்டிகுளம்,வெடுக்குநாறி, கீரிசுட்டான்,ஒதியமலை என்று மன்னர்கள் வாழ்ந்ததற்கான வழிபாடுளை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் புதைந்துபோயுள்ளன.
இவ்வறான சாமிசிலைகளை மன்னர்காலத்தில் தங்கத்திலான சிலைகள் முடிகள்,இரத்தினகற்கள் என அரும்பெரும் பொக்கிசங்கள் சில சாமிமார்களை வைத்து நிலத்தில் இருந்து எடுத்து அதனை இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில்தான் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் இன்று அதில் வைக்கப்பட்ட சிவலிங்கம் அனைத்தும் அகற்றப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளன.
இலங்கையில ; சுயம்பு லிங்கம் உடைய புராதன ஆலயமாக இவ்வாலயம்
காணப்படுகிறது. இவ்வாலயத்தில் இந்துக்ளின் விசேட வழிபாடுகளான சிவராத்திரி, சித்திரை பௌர்ணமி, ஆடி அமவாசை ஆகிய வழிபாடுகள் மேற்க்கொள்ளப்பட்டு வரப்பட்டது.

2018ம் ஆண்டுதான் இவ்வாலயம் அமைந்திருக்கும் மலைப்பகுதி தொல்பொருள் ஆராச்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இப்பிரதேசம் தொல்பொருள் பிரதேசமாக இன்றுவரை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
2018ம் ஆண்டு இப்பகுதி தொல்லியல் பகுதியாக தெரிவிக்கப்பட்டபோதும் பூசைகள் திருவிழாக்கள் செய்வதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
2019ம் ஆண்டிலேயே முதன் முதலில் நெடுங்கேணி பொலிசாரால் இவ்வாலயத்தில் பூசைகள் திருவிழாக்கள் செய்வதற்கு தடையினை ஏற்படுத்தினார்கள்
இந்த நிலையில் ஆலய நிர்வாகத்தினர் குறித்த பகுதிக்கு செல்வதற்கு நெடுங்கேணி பொலீசார் தடைகள் விதித்துள்ள நிலையில் ஆலயத்தில் வைக்கப்பட்ட லிங்கங்கள் பிடுங்கி வீசப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் யார் கரணம்? (VOICEOFMULLAI)
