Monday, April 28, 2025
HomeUncategorizedயாழில் 5 அகவை சிறுவனின் திறமைக்கு ஈழத்து ஞானக்குழந்தை விருது வழங்கிய உருத்திர சேனை!

யாழில் 5 அகவை சிறுவனின் திறமைக்கு ஈழத்து ஞானக்குழந்தை விருது வழங்கிய உருத்திர சேனை!

யாழ்ப்பாணத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது முதன்முதலாக வழங்கி வைக்கப்பட்டது.

“ஐந்து வயதில் திருவள்ளுவர் குறல்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த சிறுவன்” யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொஸ்தாபிள் சுதர்சன் அவர்களின் புதல்வன் அருணன் இன்றைய தினம் ருத்ர சேனை ஏற்பாடு செய்த திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இடம்பெற்றது.

நிகழ்வில் சிறுவன் அருணனின் ‘திருவள்ளுவரின் ஆதங்கம்’ எனும் கருப்பொருளில் திருவள்ளுவர் குரல் மற்றும் அதன் விளக்கம் என்பன எடுத்துரைத்து காட்டப்பட்டது.

தொடர்ச்சியாக சிறுவன் இந்து சமய விழுமியங்களை நிலைநிறுத்தி பல்வேறு சமய சார் சொற்பொழிவுகளை மேற்கொண்டு அனைவராலும் பாராட்டுகளை பெற்று வருகின்றார்.

ஐந்து வயதில் இந்த சிறுவனின் அதீத ஆற்றல் அனைவரையும் வியப்பில் ஆற்றி உள்ளது. இன்றைய தினம் செல்வன் சுதர்சன் அருணனுக்கு உருத்திர சேனையின் ஏற்பாட்டில் ‘ஈழத்து ஞானக் குழந்தை’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ் .ஸ்ரீ சற்குணராஜா அவர்களும் கலந்து கொண்டு சிறுவனை அன்பு பாராட்டினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments