Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் மக்களுக்கு சிறந்த பயானா?பதில்சொல்லுங்கள்!

புதுக்குடியிருப்பு நகரில் இருந்து சுமார் 400மீற்றர் தொலைவிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை அலுவலகத்திலிருந்து சுமார் 100மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபை பூங்காவானது 2020ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட சபை நிதிமூலம் அமைக்கப்பட்டதாகும்.

அதேவேளை 04.03.2022அன்று முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜசிந்தன் அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட கோடிக் கணக்கான பணத்தைச் செலவு செய்து அமைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபைப் பூங்கா

புதுக்குடியிருப்பு நகரில் பிரதேச மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் செய்ய வேண்டிய எத்தனையோ வேலைகள் இருக்கின்ற போழுது இப்பூங்கா தேவைதானா என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிரதேசத்திற்கான அபிவிருத்தியினை கொண்டு செல்லவேண்டியவர்கள் பிரதே சபையினர் அவர்கள் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் வீதிகளில் திரியும் கட்டகாக்காலி மாடுகளைகூட கட்டுப்படுத்தாதவர்கள் கோடிக்கணக்கில் பணம் செலவுசெய்து அடிக்கல் நாட்டுவதும் கட்டிடம் கட்டி திறந்துவைப்பதும்தான் இவர்கள் வேலையா?


பிரதேசத்திற்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அது மாடுகள் ஆடுகள் தூங்கும் இடமாகாவும் சமூகத்திற்கு பயன்படுத்தப்படாத ஒரு இடமாகவும்தான் புதுக்குடியிருப்பு பிரதேச பேருந்து நிலையம் காணப்படுகின்றது

இதனை விட நகரத்தில் உள்ள கழிவுகள் சரியாக அகற்றப்படுகின்றனவா கால்வாய்கள் சரியாக காணப்படுகின்றனவா சந்தை வியாபாரிகளின் செயற்பாடு சரியாக காப்படுகின்றதா மாவட்டத்தில் அதிகளவிலான வருமானத்தினை பெற்றுக்கொடுக்கும் பொது சந்தை புதுக்குடியிருப்பு சந்தை சரியாக பராமரிக்கப்படுகின்றதா? என்ற கேள்விக்கெல்லாம் தவிசாளராக இருந்த முன்னால் தவிசாயர் பதில்செல்லவேண்டும்..

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பல கிராமங்களிலுள்ள வீதிகள் மக்கள் பயணிக்க முடியாத வீதிகளாக இன்றும் உள்ளன. அதே போன்று மின்விளக்குகள் இல்லாமலும் பழுதடைந்த மின்விளக்குகள் திருத்த வேண்டியும் குடிநீர் வசதிகளின்றி எத்தனையோ கிராம மக்கள் அல்லலுற்றபடியும் இருக்கின்றார்கள்.

நகரமாக கொண்டுவரப்படவேண்டிய புதுக்குடியிருப்பின் நகரம் ஏன் ஒருசிலகுறிப்பிட்ட எல்லைக்கள் குறுகிப்போய் கிடக்கின்றது

கிராமத்தின் வீதிகளுக்கு பெயர்ப் பலகையின்றி பல கிராம வீதிகள் நம் கண்முன்னே இன்றும் காட்சியளிக்கின்றன. இப்படி பல தேவைகள் மக்களுக்கு இருக்கின்ற போது அதனைப் புதுக்குடியிருப்பு பிரதேச சபை கண்டு கொள்ளாமல் இருந்தமைக்கான காரணம்தான் என்ன?

மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளருடைய கடமையென்ன? அவர்களின் காலம் முடிந்துவிட்டது சரியாக சுட்டிக்காட்டுபவர்கள் எல்லாம் துரோகிகள் என்று சொல்வார்கள்

மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கான சரியான சேவையினை செய்யவேண்டிய பிரதேச சபை பதவிக்காகவும் கதிரைக்காகவும் அடிபடும் பிரதேச சபை உறுப்பினர்கள் இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பாருங்கள்..


கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இவர்கள் என்னசெய்தார்கள் மாதம் 15 ஆயிரம் சம்பளம் 5 ஆண்டுகளும் 7இலட்சத்தி 50 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளார்கள் சாதாரண உறுப்பினர்கள் இவர்கள் அவரவர் வட்டாரங்களுக்கு என்ன அபிவிருத்தியினை கொண்டுவந்தார்கள் என்ற கேள்வியினை வாக்களார்களாகிய மக்கள் ஒவ்வொருவரும் கேழுங்கள் உங்கள் முன் எழுந்துள்ள கேள்வி இது

இனிவரப்போகும் எந்த தேர்தலிலம் அவர்ன கள்ளன் இவன் கள்ளன் என்று வாக்கயிக்க தவறாதீர்கள் உங்கள் கிராமத்தில் வாழ்பவனால் மட்டும்தான் உங்கள் கிராமத்தினை அபிவிருத்தி செய்யமுடியும் எனவே கிராமத்தில் உள்ள நல்ல சேவைஉள்ளம் கொண்ட மனிதரை நீங்கள் தேர்தெடுங்கள் வாக்கு போடவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும் சரியான மதிப்பீடுசெய்து குறைந்த புள்ளிகளை பெறும் கள்ளரை தெரிவுசெய்யுங்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *