நெல்கொள்வனவு சபை 27 வீத வங்கிகடன் வட்டியால் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யவில்லை!
விவசாயிகளிடம் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வங்கி 27 வீதம் கடன் வட்டி கேட்டபடியால் அவ்வாறு பெற்று நெல்லினை கொள்வனவு செய்து வழங்கமுடியாது என்று நெல் சந்தைப்படுத்தும் சபை அதனை நிற்பாட்டிவிட்டுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
26.03.23 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கான அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
வறுமைக்குட்பட்டவர்கள்,சமுர்;த்திபெறுவர்கள்,சமூர்த்தி பெற தகுதிஉள்ளவர்களுக்கு பங்குனி,சித்திரை மாதம் குடும்பத்திற்கு 10 கிலோ படி மாவட்டத்தில் 33ஆயிரத்தி 303 குடும்பங்கள் இதனால் நன்மையடையக்கூடிய வாய்ப்புள்ளது.
மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கிலோ 100 ரூபுhவிற்கு நெல்லினை கொள்வனவு செய்யப்பட்டது
119 மில்லியன் தேவைப்பாடு இருந்தது அதற்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளோம்.
ஏனைய மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 3400 மெற்றிக்தொன் நெல் தேவைப்பட்டது இதில் ஒரு பகுதியினை தருவதாக உறுதி மொழி வழங்கியுள்ளோம் கொழும்பு,கண்டி,கம்பகா மலைநாடு போன்ற பிரதேசங்களில் அரிசிக்கான தேவைப்பாடு உள்ளது வடகு கிழக்கு மாவட்டங்களை வைத்து அவர்கள் கேட்கின்றார்கள்.
ஒட்டிசுட்டான்,கரைதுறைப்பற்று,புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு அரிசியினை வழங்கிவருகின்றோம்.
இன்றில் இருந்து நாடுதழுவியரீதியில் ஜனாதிபதியினால் அரிசியினை மக்களுக்கு வழங்கும் நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்திற்கு மேலதிகமாக 319 மில்லியன் நிதியும் ஓதுக்கீடும் கிடைத்துள்ளது பிரதேச செயலகத்திற்கு அதனை வழங்கியுள்ளோம் நெல்லினை பிரதேச செயலகம்தான் கொள்வனவு செய்து அரிசியஆலைக்கு கொடுத்து பொதி செய்கின்றார்கள்.
இலங்கையில் 28 இலட்சம் பேர் சமூர்த்தி பெறதகுதியானவர்களும் சமூர்த்திபெறுவர்களும் இருக்கின்றார்கள் இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு 44 ஆயிரம் மெற்றிக்தொன் தேவைப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையான நெல்லினை கொள்வனவு செய்து அரிசியாக்கி வைத்துள்ளோம் ஏனைய மாவட்டங்களுக்கும் நெல்லினை கொடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது
வுpவசாயிகள் நெல்லினை அறுவடை செய்யும் போது மிக குறைந்த விலையில் நெல்லினை வியாபாரிகளுக்கு வழங்கினார்கள் விவசாயிகள் தங்கள் நெல்லினை நெல்கொள்வனவு சபை கொள்வனவு செய்வதாக எதிர்பாத்திருங்தார்கள் இந்த முறை அதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை காரணம் விவசாயிகளிடம் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வங்கி 27 வீதம் வட்டி கேட்டபடியால் அவ்வாறு பெற்று நெல்லினை கொள்வனவு செய்து வழங்கமுடியாது என்று நெல் சந்தைப்படுத்தும் சபை அதனை நிற்பாட்டிவிட்டுள்ளது
ஆதன் பின்னர்தான் ஜனாதிபதி அவர்கள் இந்த செயற்திட்டம் ஊடாக விவசாயிகளிடம் இருந்து 100 ரூவாறிக்கு நெல்லினை கொள்வனவு செய்து வறிய மக்களுக்கு அரிசியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
நெல்லினை விவசாயிகள் ஆரம்பத்தில் கொடுப்பதற்கு பயயந்து பயந்து இருந்தார்கள் கடந்த காலங்களில் விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லினை விற்றுவிட்டு மாதக்கணக்கில் நிதிகிடைக்காமல் இருந்தார்கள் ஆனால் இப்போது அவ்வாறு நெல்லினை கொடுத்துவிட்டு இரண்டு மூன்று நாட்களுக்குள் நிதி வழங்கப்படுகின்றது.
ஒரு விவசாயிடம் இருந்து 5ஆயிரம் கிலோவினையே கொள்வனு செய்யப்படும் ஒருவர் தொடர்ச்சியாக முழு நெல்லினையும் வழங்கமுடியாது ஆகவே இந்த செயற்பாடு சிறந்த செயற்பாடாக வறிய மக்களுக்கு அமைந்துள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.