புதுக்குடியிருப்பில் யாழின் தேவைக்காக 50 மில்லியன் ரூபா பெறுமதி நெல் கொள்வனவு-எஸ்.ஜெயகாந்!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து விவசாயிகளிடம் கிலோ 100 ரூபா படி 81 மில்லியன் ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் 26.03.23 இன்று உடையார் கட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளது இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

உணவு இல்லாதவர்களுக்கு உணவு கிடைக்கவழி ஏற்பட்டுள்ளது இது அரசாங்கத்தின் ஒரு நல்லதிட்டம் அதுபோல விவசாயம் சார்ந்த பகுதியான காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விவசாயிகள் தரமான விலையில் நெல்லினை சந்தைப்படுத்துவதற்கு ஏற்றவகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

நெல்லினை விவசாயிகளிடம் இருந்து கிலோ 100 ரூபா விலையில் வாங்கி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் அரிசியாக்கி எங்கள் பகுதி மக்களுக்கே அதனை கிடைக்கச்செய்வது பல நல்ல அனுகூலங்களை தருகின்றது.

சில காலங்களுக்கு முன்னர் எங்கள் விவசாயிகள் எங்களிடம் வந்து கவலைப்பட்டார்கள் தங்களின் நெல் 5700 ரூபாவிற்குதான் தனியார் கொள்வனவு செய்கின்றார்கள் என்று ஆனால் இப்போது 7200 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளோம்

விவசாயிகளிடம் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 81 மில்லியன் ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளோம் 31 மில்லியன் ரூபாய் பெறுமதியான நெல் புதுக்குடியிருப் பிரதேசத்தில் வறுமைக்குட்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கும் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான நெல் யாழ்ப்பாணமாவட்டத்திற்கு வழங்கிவருகின்றோம் இந்த திட்டத்தில் பெருமளவு நன்மையடையும் பகுதியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய பகுதி அமைந்துள்ளது.

தற்Nபுhது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகாரிப்பினால் அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்பட்டுள்ள இந்த அரிசி மக்களுக்கு நன்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tagged in :

Admin Avatar