Lolc நிறுவனத்தின் அனுசரணையுடன் வாழ்வின் சக்தி செயல் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலையங்களில் முல்லைத்தீவு கல்வி வலையம்,துணுக்காய்கல்வி வலயம்ஆகிய இரண்டு வலையங்களைச் சேர்ந்த 13 பாடசாலைகளை சேர்ந்த 1368 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வாழ்வின் சக்தி அணியினர் மூன்று பிரிவாகப் பிரிந்து பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றார்கள்
ஒரு அணியினர் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை வலய கல்வி அலுவலகத்தில் வைத்து 7 பாடசாலைகளை சேர்ந்த 823 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகத்தின் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில முல்லைத்தீவு வலய கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ரவீந்திரன் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.பாஸ்கரன் புதுக்குடியிருப்பு Lolc கிளை முகாமையாளர் முல்லைத்தீவு முகாமையாளர் மற்றும் வாழ்வின் சக்தி செயற்திட்ட அணியினர் ஆகியோ கலந்து கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்