முல்லைத்தீவில் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தும் திணைக்களங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சில அரச திணைக்களங்கள் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி வருவதான குற்றச்சாட்டு எமது இணையத்தளத்திற்கு கிடைத்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள சில பிரதேச சபைகள் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள்.

குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையிலும் இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளது அரச வாகனங்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்திவட்டு பதிவேட்டில் பிரதேச சபையின் வேலைக்காக சென்றமை,அரச வானத்தினை பயன்படுத்தி இரண்டு தடைவ மலக்கழிவு எடுத்துவிட்டு ஒருதடவை என பதிவு புத்தகத்தில் பதிவு செய்து கணக்கு காட்டியுள்ள சம்பவங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளமை எமது இணையத்தளத்திற்கு அறியக்கிடைத்துள்ளது.

இது தொடர்பிலான சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது எமது வேண்டுகோள்

மேலும் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன பொருட்கள் கொள்வனவில் மோசடி,மனித வலுவினை சரியாக பயன்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தொடர்பில் எமக்கு கிடைத்துள்ளது இது தொடர்பில் செயலாளர் நடவடிக்கை எடுக்கத்தவறின் ஆதாரபூர்வமாக அனைத்தும் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நில அளவை திணைக்களத்தினுடைய WP NC 3687 உடைய வாகனத்தில் நேற்று (22) மாலை 6:20 மணியளவில் மல்லாவி பகுதியில் அமைந்திருக்கின்ற மதுபான சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் மதுபானங்கள் பெற்று செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது

Tagged in :

Admin Avatar

More for you