முல்லைத்தீவில் 50 மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கிவைத்த நிறுவனம்!


பாதுகாப்போம் நாளைய வீரர்களை” மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி வைப்பு.

“பாதுகாப்போம் நாளைய வீரர்களை” என்னும் தொனிப்பொருளில் அலியான்ஸ் நிறுவனத்தினரால் பாதுகாப்பு தலைக்கவசம் வழங்கும் சமூக நல நிகழ்ச்சி திட்டம் முல்லைத்தீவில் (22.09.23) முன்னெடுக்கப்பட்டது.

ஆயிரம் மாணவர்களை இலக்காக கொண்டு 2022 ஆரம்பிக்கப்பட்ட அலியான்ஸ் புரோடெக்ட் செயற்திட்டம் வெற்றியளித்ததன் காரணமாக  2023 ஆண்டும் ஆயிரம் தலைக்கவசங்களை மாணவர்களுக்கு வழங்கி வைக்கும் நோக்கோடு  ஜனவரி மாதம் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக தெரிவு செய்யப்பட்ட முல்லைத்தீவில் 50 பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இன்றையதினம் முல்லைத்தீவு இ.த.க பாடசாலையின் அதிபர் கு.மகேந்திரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அலியான்ஸ் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஈ.ஜரேஷ், முல்லைத்தீவு கிளை முகாமையாளர் வேணுதாஸ், மற்றும் கிளை ஊழியர்கள்,பொலிஸார் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்திருந்தனர்.

குறித்த திட்டத்தின் போது போக்குவரத்து பொலிஸாரின் விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத் திட்டமானது 20 இடங்களில் காலி தொடக்கம் முல்லைத்தீவு உட்பட சாவகச்சேரி வரைவழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *