Tuesday, May 6, 2025
HomeUncategorizedகாலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு!

காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு!

காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (22.09.23) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் யாழ் வளவாளராக பீற்றர் சேவியர் கலீஸ் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினார்.

செயலமர்வின் போது திடீர் அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளல், நீர்நிலைகளில் இருந்து பாதுகாத்து கொள்ளல், தீ விபத்து, அவசர தொலைபேசி இலக்கங்களின் பாவனை, சூழல் த போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த கருத்தரங்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , இளைஞர் கழக பிரதிநிதிகள்  கலந்து கொண்டிருந்தனர்

நிகழ்வில் மாவட்ட செயலக பதில் திட்டமிடல் பணிப்பாளர் கணேசமூர்த்தி ஜெயபவானி சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் மேலாளர் கணபதி பிரசாத்,  இணைப்பாளர் திஷான் மதுஷனா மற்றும் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments