விடுதலைக் கலைஞன் செல்வம் மாமா காலமனார்!

தமிழர் விடுதலைக்காக கலைவடிவத்தில் உழைத்த மனிதன் எல்லோராலும் செல்வம் மாமா என்று அழைக்கப்படும் விடுதலை கலைஞன் 12.09.23 இன்று முல்லைத்தீவில் காலமானார்.

துமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் என்றும் தமிழ்மக்கள் மத்தியில் கலைவடிவம் ஊடாக போராட்ட கருத்தினை கொண்டு செல்வதிலும் கலையினை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்ட செல்வம் மாமா

தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டு கழகத்தின் ஊடாக கலை பயணத்தினை மேற்கொண்டு பல்வேறு தெரு வழி நாடகங்கள் உள்ளிட்ட பல நாடகங்களை விடுதலை கலையினை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக அரும்பாடு பட்டவர் இதற்காக அவருக்கு தலைவர் அவர்களால் விருது கூட வழங்கப்பட்டடு கௌரவிக்கப்பட்டது இவரின் குரலினை கேட்காதவர்கள் என்று எவரும் இல்லை நடக அரங்கேற்றங்கள் உள்ளிட்ட பல கலை வடிவங்கள் அரங்கேற்றங்களுக்கு இவரின் குரல் அன்று ஒலித்துக்கொண்டிருக்கும்.

இவர் நாட்டிற்காக தனது மகன் ஒருவரை கொடுத்து இறுதிக்காலத்தில் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் வாழ்ந்து வந்தவேலை 12.09.23 இன்று காலமானார்.
துமிழர் விடுதலைக்காக உழைத்த கலைஞர்கள் படைப்பாளிகள் போற்றப்படவேண்டியவர்கள் இவ்வாறான கலைஞர்களை திறமையானவர்கள் இன்று ஒடுக்கப்பட்ட வாழ்வுக்கள் கூனி குறுகி வாழ்ந்து வருகின்றார்கள் இவர்களின் குடும்பங்கள் அவர்களின் எதிர்கால சிந்தனைகள் அவர்களின் தேவைப்பாடுகளை புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் இனம் கண்டு பொருளாதார சீர்செய்து கொடுக்கவேண்டிய தேவை காலத்தின் தேவையாக உள்ளது என்ற செய்தியினையும் தெரிவித்துக்கொண்டு.

எம்மை விட்டு பிரிந்து சென்ற செல்வம்மா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Tagged in :

Admin Avatar