வைத்தியசாலைகள் வெகுவிரைவில் இழுத்து மூடும் ஆபத்து வைத்தியர்கள் எச்சரிக்கை!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு.
நாடளாவிய ரீதியில் இன்று(12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தினை சேர்ந்த மருத்துவர்கள் வைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவமனை முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

இன்று நண்பகல் 12.30 தொடக்கம் 2.00 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

இதற்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கு போராட்டத்தின் கோரிக்கையினை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஆண்டு மட்டும் 700 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு பல அரச வைத்திய சாலைகளில் பல்வேறு மருந்துகள் தட்டுப்பாடான நிலை காணப்படுவதுடன் தரம் குறைந்த மருந்துகள் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக நோயாளிகள் உள்ளிட்ட சிலரின் அனாவசிய உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். இவ்வாறு வைத்தியர்களின் வெளியேற்றம் தொடர்ந்த வண்ணமுள்ளன இவ்வாறு வைத்தியர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து வெளியேறுகின்றார்கள்.

வைத்தியர்களின் வசதிகள் செய்துகொடுக்கப்படாமை அதிகரித்த பணவீக்கம்,பல்வேறு காரணங்களால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள் இதன்காரணமாக சுற்றயல் வைத்தியசாலைகள் வெகுவிரைவில் இழுத்து மூடும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே பலவைத்தியசாலைகளில் ஆளணி குறைந்த நிலையில் வைத்தியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.
இவ்வாறான பிரச்சினைகளால் இலவச சுகாதாரசேவையானது கடுமையான பாதிப்பினை சந்தித்து வருகி;ன்ற நிலையில் எனவே இந்த கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்களால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tagged in :

Admin Avatar