அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை உடையார்கட்டு புனித பேதுரு ஆலயமும் சேபாஸ் டெவலப்மென்ட் செண்டர் நிறுவனத்தினரும் இனைந்து நடாத்திய சிறுவர் துஸ்பிரயோக ஒழிப்பு வாரம் இந்த கிழமை முழுவதுமாக நடைபெற்று வருகிறது
அந்த வகையில் இன்றைய தினம் மாலை புனித பேதுரு ஆலய முன்றலில் சிறுவர் துஸ்பிரயோக ஒளிப்பு பேரணி ஆரம்பித்து உடையார்கட்டு சுதந்திரபுர சந்திவரை சென்று அங்கே பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு இன்னும் பல விளிப்புனர்வு செயற்பாடுகளும் நடைபெற்று பேரணி திரும்பவும் திருச்சபை நோக்கி சென்று நிறைவடைந்தது.
பேரணியில் பிரதம அதிதியாக அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை முன்னாள் செயலாளரும் சிரேஷ்ட குருவானவருமான அருட்தந்தை அண்டனி சுதாகர் அவர்களும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் மற்றும்
சேபாஸ் டெவலப்மென்ட் செண்டர் முகாமையாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள் சிறுவர்கள், பெற்றோர்கள், திருச்சபை மக்கள், நலன்விரும்பிகள்
என பலரும் கலந்து கொண்டனர்.