பண்டாரவன்னியன் ஆங்கிலேயரிடம் முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றிய 220 ஆண்டு வெற்றி விழா!


வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையினை ஆங்கிலேயரிடம் வெற்றிகொண்டதன் 220 ஆவது ஆண்டுவிழா 25.08.23 அன்று காலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கற்சிலை மடு கிராமத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

முன்னதாக பண்டாரவன்னியன் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பவனியுடன் பிரதம விருந்தினர்கள்,சிறப்பு விருந்தினர்களுடன் காவடியாட்டம் குடமுழுக்கு கலைஞர்களின் கலைஆற்றலுடன் கற்சிலைமடு சந்தியில் இருந்து எடுத்துவரப்பட்டு
கற்சிலை மடு பண்டாரவன்னியன் சிலை அமைந்துள்ள வளாகத்தில் விழா ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களுகம் கௌரவ விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களும் துணக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் மாலதி முகுந்தன்,ஒட்டுசுட்டான் பிரதே செயலாளர் ஜெயராணி பரமோதயன்,கூட்டுறவு அபிவிருத்தி உதவிஆணையாளர் புஸ்பராணி புவனேஸ்வரன், உள்ளிட்ட  திணைக்களஅதிகாரிகள் பாடசாலை அதிபர்கள்,சகூக சேவையாளர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

பண்டாரவன்னியன் வரலாற்றினை முல்லைமோடிகூத்து வடிவில் முழுமையாக பார்பதற்கு கீழ் உள்ள லிங்கிற்கு செல்லுங்கள்

இதன்போது பண்டாரவன்னியன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து உருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து கவிஞர் முல்லைத்தீபன் தலைமையிலான கவியரங்கம் என்பன இடம்பெற்று பண்டாரவன்னியனின் வரலாற்று கதையினை முல்லைமோடி கூத்தாக உருவாக்கம் செய்து மக்கள் மத்தியில் அறிமுகம் செய்த முதுபெரும் கலைஞர் காலாபூசணம் என்.எஸ்.மணியம் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவன்னியரின் வீரவரலாற்றினை எதிர்கால சந்ததிக்காக கலை வடிவில் கடத்தும் அண்மையில் பண்டாரவன்னியன்; கதையினை முல்லைமோடி வட்டங்களரியில் அரங்கேற்றிய பெரும் கலைஞனுக்காக இந்த கௌரவம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பண்டாரவன்னியனின் 220 ஆண்டு வெற்றிவிழா நிகழ்வு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் இன்று 25.08.23 நடைபெற்ற முழுமையான நிகழ்வினை பார்பதற்கு

கலாநிதி முல்லை மணி அவர்களின் எண்ணத்தில்  உருவான பண்டாரவன்னியனை தமிழர்களின் கலைகளுக்கூடா கொண்டு செல்லும் கலைஞன் கலாபூசனம் என்.எஸ்.மணியம் அவர்களுக்கு மதிப்பளிப்பு பட்டையம் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கும்  சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *