மனித யாணை மோதலை சித்தரிக்கும் கேலிச்சித்திர கண்காட்சி!

உலக யானைகள் தினத்தை ஒட்டி வவுனியா பல்கலைக்கழக  வளாகத்தில் இலங்கையில் மனித யாணை மோதலை சித்தரிக்கும் கேலிச்சித்திர கண்காட்சி

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) 

ஆகியன இணைந்து 2023ஆம் ஆண்டுக்கான உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் பூங்கா வீதி வளாகத்தில்  இலங்கையில் மனித யாணை மோதலை கேலிச்சித்திரங்கள் மூலம் புரிந்து கொள்வோம் எனும் தொனிப்பொருளில் கேலிச்சித்திர கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கெள்கிறது

உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12

நேற்றைய தினம் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.மங்களேஸ்வரன் அவர்களால் இந்த கண்காட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த கண்காட்சியானது ஆகஸ்ட் 12

மற்றும் 13 ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறுகின்றது 

அதன்படி, கேலிச்சித்திரங்கள் (கார்ட்டூன்), கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் மனித யானை மோதல் (HEC) மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்

இதன் ஒரு அங்கமாக இன்று மாலை 6 மணிக்குஇந்த நிகழ்வின் பிரதான அமைப்பாளர் பேராசிரியர் கலாநிதி எஸ்.வியஜமோகன்அவர்களினால் மனித யானை மோதல் (HEC) மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றும் இடம்பெறவுள்ளது 

Tagged in :

Admin Avatar