2006.08.14 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகைதந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது
தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் அனுஸ்ரிக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை.
குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.