முள்ளியவளையில் றவுடிகளின் அட்டகாசம் பொதுசந்தை மீது தாக்குதல் வியாபாரிகள் பாதிப்பு!


முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள முள்ளியவளை பொது சந்தை நேற்று இரவு அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வியாபாரிகளின் மரக்கறிகள் உள்ளிட்ட சந்தை கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று (10) இரவு காவலாளி சந்தையின் முன் கதவினை பூட்டிய நிலையில் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று சந்தையின் கதவினை உடைத்து உள்ளே புகுந்து சந்தைக்குள் இருந்து மது அருந்தபோவதாக காவலாளியுடன் முரண்பட்ட நிலையில் கையில் மதுபான போத்தல்களுடன் வந்த நபர்கள் சந்தை கட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதனால் இன்று (11) காலை சந்தையினை பூட்டி பொலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள் கலை 10.00 மணிவரை பொலீசார் வந்து விசாரணை செய்யும் வரை சந்தை நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

சம்பவ இடத்திற்கு முள்ளியவளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலீஸ் குழுவினர் வருகை தந்துள்ளதுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளார் க.சண்முகநாதன் உள்ளிட்ட சபையின் உத்தியோகத்தர்கள் வந்து பார்வையிட்டுள்ளதுடன் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்கள்.

தாக்குதலுக்கு உள்ளான கட்டங்கள்  மற்றும் சேதமடைந்த கடைகள் மரக்கறிகளை பார்வையிட்டு அறிக்கையிட்ட பொலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியள்ளதை தொடர்ந்து சந்தை வியாபாரத்தினை மேற்கொள்ள பணித்துள்ளார்கள்.

இது தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச சைபயின் செயலாளர் க.சண்முகநாதன் கருத்து தெரிவிக்கையில்
அவர் கருத்தில் ஏற்கனவே சந்தையின் சி.சி.ரிவி கமரா சேதப்படுத்தப்பட்டு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லை நேற்று நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தினால் வியாபாரிகளின் வியாபாரம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் முழுமையான அறிக்கையினை பொலீசார் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் சேத விபரங்கள் தொடர்பில் பிரதேச சபை ஊடாக அறிக்கை எடுத்து பொலீஸ் முறைப்பாட்டுடன் பிரதேச சபை சட்டவாளர் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சந்தைமீது தாக்குதல் மேற்கொண்ட குறித்த நபர்கள் இதற்கு முன்னர் செய்த குற்றத்திற்காக சிறை சென்று அண்மையில் விடுதலையான நிலையில் இவ்வாறான அடாவடியில் ஈடுபட்டுள்மையினால் பொதுமக்களுக்கான பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அரச சொத்திற்கு சேதம் ஏற்படுத்தி சந்தைவியாபாரத்தினை பாதிப்புக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் பொலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *