Friday, May 2, 2025
HomeUncategorizedசிறுநீரக நோயினை கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!

சிறுநீரக நோயினை கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!

வடமாகாணத்தில் பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான அடிக்கல்கள் நாட்டிவைக்கப்பட்டு நிர்மானம் செய்றப்பட்டு 03.08.23 இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு,கற்ச்சிலைமடு,காதலியார் சம்மளங்குளம்,ஒலுமடு ஆகிய கிராமங்களிற்கு சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றைய தினம் (03.08.23) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ திரு.பிரசன்ன ரணத்துங்க அவர்களினால் கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவில் சிறுநீரக நோயாளர்கள் காணப்படும் நிலையில் வடக்கில் முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவுனியா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 23 நனே சுத்திகரிப்பு குடிநீர் திட்டமும், வவுனியா மாவட்டத்தில் 23 நனோ சுத்திகரிப்பு குடிநீர் திட்டமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 குடிநீர் திட்டமும் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

தற்காக 209 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
சுத்தமான குடிநீர் இல்லாது மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். அத்தோடு தீரா சிறுநீரக நோயினாலும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையினைப் போக்கிட சிறந்த செயற்றிட்டமாக நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவாட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த, நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு, சத்தியானந்த, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துளசேன, முல்லத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.உமாமகேஸ்வரன் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி, கிராம அலுவலகர்கள், உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments