குழந்தைகளின் ஆரோக்கியத்தினை விழுங்கும் Samart Phone-மக்களுக்கு விழிப்புணர்வு!

தொலைபேசி பாவனை அதிகரிப்பினால் சிறுவர்கள்  மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில்தற்போது சிறுவர்கள் இடத்தில் அதிரித்துள்ள தொலைபேசி பாவனையால் சிறுவர்களின் ஆரோக்கியம் கெட்டுக்கொண்டு செல்கின்றது பெற்றோர்களை விட அதிகளவில் சிறுவர்கள் தொலைபேசியினை பயன்படுத்துகின்றார்கள்.

பால்குடிக்கும் குழந்தை தொடக்கம் பரும் அடையும் மங்கை வரையில் தொலைபேசி பாவனையில் மூழ்கி இருக்கின்றார்கள் இளைஞர்கள்யுவதிகள் மத்தியிலும் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதால் அதன் ஊடான துஸ்பிரயோகங்களுகம் அதிகரித்துள்ளது பல வீடுகளில் தொலைபேசிகளால் அண்ணன் தங்கை உறவுகளில் கூட விரிசல் அடைந்து செல்கின்றது பொதுவா தொலைபேசி இல்லாத வீடுகள் இல்லை  என்ற நிலைக்கு இன்று மக்கள் வந்துள்ளார்கள்.

சிறு வயது குழந்தைகள் மற்றும் ,முன்பள்ளி சிறார்கள்  மத்தியில் அதிகரித்து காணப்படும்  தொலைபேசி பாவனைகளால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி யோகபுரம் மகா வித்தியாலய மண்டபத்தில்  இன்று (03-08-2023 ) இடம்பெற்றிருந்தது

 (Unicef) ஐக்கிய நாடுகள் குழந்தை நல நிறுவனத்தின் அனுசரணையுடன் Offer Ceylon ஊடாக
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குற்பட்ட  சிறு வயது குழந்தைகள் மற்றும் ,முன்பள்ளி சிறார்களின் பெற்றோரகளுடனான கலந்துரையாடலே  முற்கட்டமாக இன்றைய தினம் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால்  நடாத்தப்பட்டிருந்தது

குறித்த நிகழ்வில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சாந்தமேனன், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள்,முன் பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர்கள்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினரால் மாவட்டத்தில் முதன்முறையாக குறித்த கலந்துரையாடல் முதற்கட்டமாக மல்லாவி பகுதியில் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tagged in :

Admin Avatar