முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் (03.08) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவில் காணப்படுகின்ற அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள், மக்கள் எதிர் கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இதில் முக்கியமாக விவசாய நடவடிக்கை, கமநல அபிவிருத்தித் திணைக்களம், மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவது தொடர்பாக , யானை வேலி அமைத்தல், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனவளத் திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், தனியார் மற்றும் அரச போக்குவரத்து , நன்னீர் மீன்பிடி, முல்லைத்தீவு பஸ் நிலையத்தை இயங்க வைத்தல் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. 

இந்தக் கூட்டத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன், வட மாகாண திணைக்களங்களின் செயலாளர்கள், முப்படையினர், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Tagged in :

Admin Avatar