முல்லைத்தீவில் வறட்சி-மல்லாவி குளத்தில் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள்உயிரிழப்பு!

முல்லைத்தீவு மல்லாவி குளத்தின் வாய்க்காலில் மீன்கள் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான வறட்சி நிலவி வருகின்றது இந்த நிலையில் பல சிறுகுளங்களில் நீர் இல்லாத நிலை காணப்படுகின்றது துணுக்காய் பிரதேத்சத்திற்கு உட்பட்ட மல்லாவி குளத்தில் முற்றுமுழுதாக நீர் வற்றிய நிலை காணப்படுகின்றது.

நீர் இல்லாத நிலையினால் கால்நடைகள் நீரினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.
இந்த நிலையில்  மல்லாவி குளத்தில் நீர்இல்லை என்று தெரிந்தும் அதன் வாய்க்கால் கொட்டு ஒன்று திறக்கப்பட்டுள்ளதால் அதில் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் உயிரிழந்துள்ளன.

நன்னீர் மீனவர்ளின் வாழ்வாதாரமாக காணப்படும் குளங்களில் பல இலட்சம் செலவு செய்து மீன்குஞ்சுகளை அரசாங்கம் விட்டு வருகின்றது இந்த நிலையில் மல்லாவி குளத்தில் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் வாய்க்காலில் உயிரிழந்து காணப்படுகின்றன.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பாப்பாகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அதிகளவிலான வெப்பநிலை பதிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tagged in :

Admin Avatar