குமுழமுனை வட்டார வனவளத்திணைக்கள அலுவலகம் திறந்துவைப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத்திணைக்களத்தின் குமுழமுனை பிரதேசத்திற்குரிய வனவளத்திணைக்கள வட்டார அலுவலகம் இன்று 02.08.23 திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குமுனமுணை ஆண்டாங்குளம் வனவள காரியாளயம் மாவட்ட வனவள அதிகாரியின் திட்டமிடலுக்கு அமைவாக புணர்நிர்மாணம் செய்யப்பட்டு வைபக ரீதியாக கொழும்பு வனபாதுகாவலர் நாயகம்    Dr. K.M.A.Bandara அவர்களினால் வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்விற்கு கொழும்பு வனவள பாதுகாப்பு நாயகத்தின் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட வனவள அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான வனங்கள் சட்டவிரோத செயற்பாடுகளால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வனவளத்திணைக்களத்தின் ஈடுபட்டு வருகின்றார்கள் முள்ளியவளை பிரதேசத்தில் மாவட்ட அலுவலகம் காணப்படும் நிலையில் பிரதேசங்களை மையப்படுத்தி அலுவலகங்கள் காணப்பட்ட போதும் பிரதேசத்திற்குரிய வட்டார அலுவலகங்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது இந்த நிலையில் பல வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்களின் பணியினை இலகுபடுத்தும் நோக்கில் இந்த வட்டார அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *