மாவட்ட செயலகத்தில் திறன் விருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்!


முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் திறன் விருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களின் உள மற்றும் ஆளுமையை மேம்படுத்தும் முகமாக மாவட்ட செயலக பயிற்சிப் பிரிவினால் ” சுய மற்றும் சமூக நிலை ஆய்ந்து நோக்கலும் ஒன்றிணைத்தலும் ” (Self and Social Introspection and Integration) எனும் தலைப்பில் யோகா மற்றும் அரங்காற்றுகையுடன் இயைந்த இரு நாட்கள் கொண்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் இன்றைய தினம் (11.07.2023) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த பயிற்சியானது நாளையதினமும் இடம்பெறவுள்ளது.

இப் பயிற்சி நெறியின் வளவாளராக பிரபல நாடகம் மற்றும் அரங்காற்றுகை கலைஞரும்  எழுத்தாளருமான பூபாலசிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்.

பயிற்சி ஆரம்ப நிகழ்வில் மாட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட செயலக ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *