சரத்வீரசேகராவின் எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் திரண்ட சட்டத்தரணிகள்-புலனாய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு ஒளிப்படம் எடுத்தல்!
கடந்த 07.07.23 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வானூர்திமூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவர்கள் தமிழ் நீதிபதிகள் தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சிங்கள பௌத்த நாடென்பதை முல்லைத்தீவு நீதிபதி மறந்து விடக்கூடாது என எச்சரித்த சரத் குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை.
அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகிறார்கள்.
ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ள கருத்திற்கு வடக்கு மாகாண சட்டத்தரணிகள் கண்டித்து கவனயீர்ப்பினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள்.
11.07.23 இன்று நீதிமன்ற செயற்பாடுகளை புறக்கணித்து கவனயீர்ப்பினை வெளிக்கொண்டுவந்த அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் பதாதைகளை தாங்கியவாறு தங்கள் வனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டநீதிபதி அவர்களுக்கு எதிராக பாராளுமன்றில் சொல்லப்பட்ட அவதூறான அச்சுறுத்தும் பேச்சுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளது இதற்கு வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்தவர்கள் ஆதரவு வழங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்முனை போன்ற இடங்களில் வலய சட்டத்தரணிகள் சங்கத்தினரும் சட்டதரணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
பாராளுமன்ற உரையானது கௌரவ நீதிபதிஅவர்களை பாதிக்கும் விதத்திலும் அவரது நீதித்துறையின் சுதந்திரத்தினை பாதிக்கும் விதத்திலும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நீதித்துறையின் சுதந்திரதி;தினை பாதிக்கும் நீதிபதிகளின் கௌரவத்தினை பாதிக்கக்கூடிய அச்சுறுத்தக்கூடிய வகையிலான பேச்சுக்கள் பாராளுமன்றில் சிறப்புரிமையினை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவர்கள் மேற்கொள்ளப்பட்டதைஇட்டு அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து சட்டத்தரணிகள் இந்த கவனயீர்ப்பினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள்.
இவ்வாறான கண்டனங்கள் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்தினை பாதுகாக்கவும் நீதிபதிகளின் இறைமையினை பாதுகாக்குமே முடிமே தவிர நேரடியாக சில சுதந்திரத்தினை பாதிக்கக்கூடிய விசயங்களை நாங்கள் தடைசெய்யமுடியாது பாராளுமன்றத்தில் சிறப்புரிமையினை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பேசிய விடையங்கள் நீதித்துறையினை மட்டுமல்லாமல் நீதிபதிகளின் கௌரவத்தினையும் அவர்களை அவமதிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காக இன்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக கவயீர்ப்பினை வெளிக்கொண்டுவந்துள்ளோம் என்று முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் ரி.பரஞ்சோதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பினை வெளிப்படுத்தும் பதாதைகளை தாங்கிய வடமாகாண சட்டத்தரணிகள் தங்கள் கவனயீர்ப்பினை வெளியிப்படுத்திய பின்னர் ஊடகங்களுக்கு குருத்து தெரிவித்துள்ளார்கள்.
நீதிபதிகளின் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை முல்லதை;தீவு பகுதியினை சேர்ந்த பெருமளவான புலனாய்வாளர்கள் திரண்டு காணொளி எடுத்துள்ளமையினையும் காணக்கூடியதாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.