அளம்பிலில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!


முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணிஒன்றில் உள்ள மலசல குழியினை துப்பரவு செய்யும் போது அதில் இருந்து வெடிபொருட்கள் சில இனம் காணப்பட்டுள்ளன இந்த  நிலையில் முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து குறித்த வெடிபொருட்கள் மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தார்கள்.

முல்லைத்தீவு வண்ணான் குளம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் தனுஷியா என்பவருக்குச் சொந்தமான காணியில் உள்ள பழைய கழிவறைக் குழியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
10.07.23 அன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

01. M75 வகையின் 56 கைக்குண்டுகள்.

02. 06 RPG தோட்டாக்கள்.
03. 81 மி.மீ வகையின் 13 பாரா.
04. 81 மி.மீ மோர்டார் குண்டு 49 சுற்றுகள்.
05. 60 மி.மீ மோட்டார் குண்டுகள் 01.
06. 60 மி.மீ பாரா 01.
07. 7.62 x 3 வகையின் 2000 தோட்டாக்கல்  (T56 வகை)
08. 02 பாரா மோட்டார் சார்ஜர்கள்.

என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.
மீட்கப்பட்ட வெடிபொருட்களை சிறப்பு அதிரடிப்படையினர் செயலிழக்கம் செய்யப்பட்டு 05.10.23 அன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *