மல்லாவியில் இடியனால் சுட்டதில் 23 அகவை இளைஞன் பலி!


முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, பாலிநகர் பகுதியில் கடந்த 09.07.23 இரவு 10 மணியளவில் குறித்த   சம்பவம் இடம்பெற்றுள்ளதுமுல்லைத்தீவு, மல்லாவி, பாலிநகர்  பகுதியில் உள்ள வீடொன்றில்  இருந்த  23வயதான இளைஞன் மீதே நாட்டு துவக்கு (இடியன்) கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டுள்ளது.

 இதன் போது குறித்த  இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.பாலிநகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் டிலக்சன் 23 என்ற இளைஞரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்

இதேவேளை நேற்று இரவு பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்திருந்த இருவரில் ஒருவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலும் மற்றையவர் கிளிநொச்சி மாவட்ட பொது  வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதே வேளை நேற்று மாலை பாலிநகர் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவ இடத்திற்கு  வருகை தந்திருந்த கிளிநொச்சி மாவட்ட தடயவியல் போலீசார் விசாரனைகளை  முன்னெடுத்து வருகின்றனர்

சம்பவ இடத்திற்கு வருகை   தந்த மாவட்ட நீதவான் உடற்கூறாய்வு பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிசாருக்கு பணித்தார்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *