ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 7 நிலஙக்கடலை சாறும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!


வன்னி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தினால் ( ILO) களை சாறும் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட முத்துவிநாயகர்புரம் நிலக்கடலையாளர் உற்பத்தி சங்கத்திற்கு 04 இயந்திம், முத்தயன்கட்டு நிலக்கடலை உற்பத்தியாளர் சங்கத்திற்கு 03 இயந்திரங்கள் அடங்கலாக மொத்தம் 07 இயந்திரகள் ( Inter Cultivator) (06.07.2023) ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட பணிப்பாளர், பிரதிமாகாண விவசாயப் பணிப்பாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் , விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *