Sunday, April 27, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் நீர்கொழும்பு வாசிக்கு 46 ஏக்கரில் காணி!

முல்லைத்தீவில் நீர்கொழும்பு வாசிக்கு 46 ஏக்கரில் காணி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கொக்கிளாய் கடல் நீர் ஏரியினை அண்மித்த கடற்கரைப்பகுதியில் நீர்கொழும்பில் உள்ள தனி நபர் ஒருவருக்கு 46 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்வதற்கான காணிஅளவீட்டு மதிப்பாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளருக்கோ மாவட்ட செயலாளருக்கோ எந்தவித அறிவிப்புக்களும் வழங்காத நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டம் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

நீர் கொழும்பில் உள்ள நபர் ஒருவர் மகாவலி எல் வலயத்தில் கிரி இப்பன்வௌ ஜனகபுர பகுதியில் கொக்கிளாய் கடலுக்கு அருகில் 46 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்வதற்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்த திட்டம் தொடர்பில் கடந்த 08.03.2023 அன்று வெலிஓயா பிரதேசத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் குறித்த உப்பு உற்பத்திக்காக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தொல்பொருள் எச்சங்கள் காணப்படுகின்றதாக என்பதை உறுதிப்படுத்த மகாவலி அதிகார சபையினால் தொல்லியல் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட எந்த திணைக்களத்திற்கும் அறிவிக்காத நிலையில் தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகளை எல்லைப்படுத்தி தொல்பொருள் இருப்பது தொடர்பான கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த பகுதிகளில் பெருமளவானவவை தமிழ்மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
தொல்பொருள் திணைக்களத்தின் இந்த நடவடிக்கை குறித்து கிராம சேவகரிடம் மக்கள் முறையிட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments