முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்;மலையில் விகாரை அமைப்பு தொடர்பில் நீதிமன்ற கட்டளையில் 12.06.2022 அன்று இருந்தசூழ்நிலையினை பேண வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மீறியும் விகாரை அமைத்து முடிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆழுகையின் கீழ் உள்ள பகுதியில் பௌத்தாலோகா நற்பணி மன்றத்தின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு கல்வெட்டு பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
04.07.23 இன்று குருந்தூர்மலைக்கு சென்று பார்வையிட்ட தரப்பினரால் இது வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரைக்கு அருகில் பாரிய கருங்கல்லினால் மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இந்த நினைவு கல்வெட்டு தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த நினைவு கல்வெட்டில் வெற்றி உண்டாகட்டும் என்ற தலைப்பில்
முல்லைத்தீவு குருந்தி விகாரையில் அமைந்துள்ள இந்தபிரமாண்டமான தூபி இரண்டாயிரம் வருடங்களை கடந்து பெருமைமிக்கது 37 அடி உயரமும் 16.5 அடி ஆரையும்கொண்டது இலங்கையில் தற்போது காணப்படுகின்ற தூபிகளில் முற்றத்தில் இருந்தே செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரேஒரு தூபி இதுவென்பதோடு இதற்கு கீழே காணப்படும் சுவரில் சுமார் இரண்டு அடி உயரம் கொண்ட யானைகளின் வரிசை யானைகளுக்கிடையே காணப்படும் தூண்கள்,தூபியின் வளையம் உட்பட அனைத்தும் செதுக்கல் வேலைப்பாடுகளும் செங்கற்களாலே செதுக்கப்பட்டுள்ளது.
என்று சொன்று விகாராதிபதி கலகமுவ சாந்த போதி தேரரின் வழிகாட்டல்களின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுரமனதுங்க அவர்களின் பங்குபற்றலுடன் தொல்பொருள் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழும் இலங்கையின் இராணுவம் மற்றும் சிவில்பாதுகாப்பு படையினரின் அயராத பங்களிப்புடனும் பௌத்தாலோக நற்பணி மன்றத்தின் முழுமையான நிதி பங்களிப்புடனும் தொல்பொருள் திணைக்களத்திடம்கையளிக்கப்படுகின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கட்டுவதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதி கொடுத்ததா? என்றகேள்வி எழுந்துள்ளது.
தொல்பொருள்திணைக்களம் அகள்வாராச்சி என சொல்லப்பட்ட இடத்தில் பௌத்தாலோகா நற்பணி மன்றத்தினால் எவ்வாறு கட்டப்பட்டது என ஆதிஜயனார் ஆலய சட்டத்தரணிகளால் அந்தஇடத்தில் வைத்து கௌரவ நீதிபதிக்கு ஆட்சேபனையினை தெரிவித்துள்ளார்கள்.
அதில் நினைவுக்கல் பெயர்பலகை தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது என்று தொல்பொருள் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவிக்கின்றார்கள் எனினும் யாருக்கும் எவருக்கும் எந்தவகையிலும் தனியாருக்கு எதுவித கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி கொடுப்பதற்கு தொல்பொருட் சட்டங்களின் கீழ் அனுமதி இல்லை என்பதால் இந்த பெயர் பலகை சரியான விடையங்களை சுட்டிக்காட்டுகின்றதா என்பதும் அடுத்தது இந்த பெயர்பலகை முற்றுமுழுதாக சட்டத்திற்கு அப்பாற்பட்டது ஏன் என்றால் ஒரு தனிப்பட்ட தாபனத்தின் பெயர் (பௌத்தாலோகா நற்பணி மன்றத்தின் ) அவர்களின் அனுசரணையின் கீழ் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு கல்லில் பொறிக்கப்பட்ட விடையங்களை பார்த்தால் இதில் சொல்லப்பட்டுள்ள விடையங்கள் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ள விடையங்களை சுட்டிக்காட்டியுள்ளதே தவிர நிகழ்காலத்தில் உள்ளதை இல்லை எனவே தவறான விடையங்களை சுட்டிக்காட்டி இருக்கின்றது
இந்த விடையத்தில் மதிப்பிற்குரிய நீதிமன்றம் பல தடவைகள் இருந்தநிலையினை பேணுமாறும் கட்டளையிட்டுள்ளது எனினும் அதனை மீறி இந்த பெயர் நினைவுகல் பாரியளவில் அமைக்கப்பட்டுள்ளது இது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல என்பதை நீதிபதி அவர்களுக்கு ஆதி சிவன் ஜயனார் ஆலய நிர்வாகம் சார்பில் பிரசன்னமான சட்டத்தரணி கே.எஸ்.ரண்டவேல் அவர்கள் ஆட்சேபனையினை தெரிவித்துள்ளார்.
இதேவேளை பௌத்தாலோக நற்பணிமன்றத்தின் சார்பில் பிரசன்னமான சட்டத்தரணி தனது ஆட்சேபனையினை அந்த இடத்தில் கௌரவ நீதிபதி அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களம் தொல்பொருள் சட்டங்களின் கீழ் இந்த விடையங்களை செய்து வருகின்றது
தொல்பொருள் சட்டத்தின் விதிமுறைகளை மீறி செயற்பட்டிருந்தால் நீதிமன்றத்திற்கு அதிகாரம்இருக்கின்றது அவற்றை அகற்றுவதற்கு இந்த விடையம் (நினைவுகல்) தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியினை பெற்றுநிர்மானிக்கப்பட்டுள்ளது எதிர்கால சந்ததியினருக்கு இந்த புனருத்தானம் செய்தது யார் என்பது தெரியவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்