குருந்தூர் மலையில் நீதிபதி முன்னிலையில் வழிபாட்டினை மேற்கொண்ட பௌத்த துறவிகள்!
04.07.23 முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் கள ஆய்வினை மேற்கொண்டு வந்த வேளை குருந்தூர்; மலையில் பௌத்த மதகுருமார்கள் சென்ற வழிபாடுகளை மேற்கொண்டுவந்துள்ளார்கள்.
இந்த சம்பவம் நீதிபதியின் கண்ணில் தென்பட உடனடியாக பொலீசாருக்கு கட்டளையிட்டுள்ளார் வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் என்று நீதி மன்றம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வேளையில் இந்த சம்பவம் அங்குளபௌத்த ஆதிகத்தினை வெளிப்படுத்;தியுள்ளது.
பொலீசார் பௌத்த மதகுருமாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து குருந்தூர் மலை விகாரையில் இருந்து பௌத்த மகருமார்கள் இறங்கியுள்ளார்கள்.
இது தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் கண்டனத்தினை வெளியிட்டு;ள்ளார்கள்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்றஉறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டு குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களம் அகழ்வு பணியினை மட்டும் செய்யப்போவதாக கூறி அன்று இருந்த தொல்பொருள் துறை அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க மக்களை நம்பவைத்து தொல்பொருள் திணைக்களத்தின் பணிகளை செய்ய இடையூறு ஏற்படுத்தக்கூடாது என தெரிவித்ததன் காரணமாக மக்கள் எதிர்பு போராட்டம் ஒன்றும் இடம்பெறவில்லை அதன் பிற்பாடு கொரோனா போன்ற நெருக்கடி நிலமைகளை சாதகமாக பயன்படுத்தி அங்கு பாரிய கட்டுமானம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு எதிராக அங்குள்ள இந்து கோவில் நிர்வாகத்தினால் பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றின் கவனத்திற்கு வந்தபோது நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது அந்த கட்டுமானங்கள் அந்த கட்டத்திலேயே நிறுத்த வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளது.
ஆனால் இன்று அங்கு செல்கின்ற பொழுது அங்கு முழுமையாக நீதிமன்ற உத்தரவினை மீறி நீதிமன்றத்தினை மதிக்காமல் சரத்வீரசேகர போன்ற இனவாத அரசியல் வாதிகளின் துணையுடன் அங்கு விகாரை கட்டுமானம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையினை ஒரு பௌத்த ஆலயமாக மாற்றி அதனை தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்கம் நோக்கத்தில் அந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று நீதி பதி அங்கு விசாரணைகளை மேற்கொண்டு இருக்கின்ற பொழுதே நீதிமன்றத்தின் உத்தரவுகள் எதனையும் மதிக்காமல் எட்டு வரையான பிக்குமார்கள் வந்நார்கள் அவர்களை சரத்வீரசேகர கால்களில் தொட்டு வணங்கினார் அவர்கள்கொண்டுவந்த பூக்களுடன் விகாரையில் ஏறினார்கள் வணக்க நிகழ்வுகளை ஈடுபட்டுளு;ளார்கள் இது எதனை அவர்கள் கட்டியம் கூறி நிக்கின்றார்கள் என்றால்.
வடக்கு கிழக்கில் நீதிமன்றங்கள் என்னத்தை சொன்னாலும் கணக்கில் எடுக்கப்போவதில்லை தாங்கள் நினைப்பதைதான் செய்வோம் என்கின்ற செய்தியினைத்தான் அவர்கள் நடவடிக்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இருந்தாலும் சரத்வீர சேகர குருந்தூர் மலைக்கு வந்தது எல்லாம் அவர் ஒரு மிகமோசமான இனவெறி மனப்பான்மையினை கொண்ட ஒருவர் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் உரிமையினை மறுதலித்து தமிழர்களின் இருப்பை முற்றாக நிராகரித்து ஒரு இனவாத கருத்தினையே எப்போதும் கூறும் ஒருவர் அவர் இந்த இடத்திற்கு வரவேண்டிய அவசியம் கிடையாது அப்படி இருந்தும் அவர் வந்துள்ளார் என்றால் அவர்கள் தங்களின் நிகழ்சி நிரலின் படி இதனை ஒரு பௌத்த ஆதிக்கத்திற்குள் கொண்டு செல்கின்ற நோக்கத்தோடு வந்துள்ளார் என்பது எங்களின் கருத்து
தமிழ்மக்கள் இந்த விடையத்தில் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக நின்று முகம் கொடுக்கதவறினால் தொடச்சியாக இவர்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை தீவிரப்படுத்துவார்கள் என்பதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.