Wednesday, April 30, 2025
HomeUncategorizedஅறிக்கை சமர்ப்பிக தொல்லியல்திணைக்ளத்திற்கும் பொலீசாருக்கும் பணிப்பு!

அறிக்கை சமர்ப்பிக தொல்லியல்திணைக்ளத்திற்கும் பொலீசாருக்கும் பணிப்பு!

குருந்தூர் மலை விவகாரம் பதிலறிக்கை சமர்ப்பிக தொல்லியல்திணைக்ளத்திற்கும் பொலீசாருக்கும் பணிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்ட  வழக்கு இரண்டாவது தடவையாக இன்று 04.07.23  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் குருந்தூர் மலைக்கு சென்று நிலமைகளை கள ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார்.

நீதிபதி குருந்தூர் மலைக்கு பயணம் மேற்கொண்டு மேலதிகமாக செய்யப்பட்டுள்ள மேம்படுத்தல் வேலைத்திட்டங்களை கண்காணிக்க கள வியயம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

ஏங்கனவே ஆலய சபையினர் சார்பில் நகர்த்தல் பத்திரம் செய்து அதில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது குறித்த பகுதியில் நீதிமன்ற கட்டளைக்கு எதிராக 12.06.2022 அன்று இருந்தசூழ்நிலையினை பேண வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மீறி அந்த இடத்தில் மேம்படுத்தல் வேலைகள் செய்யப்பட்டுள்ளதை ஆதரத்துடன் நிருப்பித்துள்ளதாக ஆதிசிவன் ஜயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அது தொடர்பில் இன்று நீதவான் குருந்தூர் மலைப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்றுள்ள விடையங்களை குறிப்பெடுத்துள்ளார்.

இது தொடர்பாக பதில் அறிக்கை வழங்குவதற்காக பொலீசாருக்கும் தொல்லியல் திணைக்கத்திற்கும் திகதி வழங்கப்பட்டுள்ளது 08.08.23 அன்று அவர்கள் அறிக்கையினை மன்றில்; தாக்கல் செய்ய திகதியிடப்பட்டுள்ளது அறிக்கையின் பிற்பாடு அதுதொடர்பிலான கட்டளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்படும் என்று சட்டத்தரணி எஸ்.தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

ஆதிசிவன் ஜயனார் ஆலயம் சார்பில் முத்த சட்டத்தரணியான கே.எஸ்.ரண்டவேல்,மற்றும் தனஞ்செயன் மற்றும் மாவட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் முன்னிலையானதுடன் குருந்தூர் மலைக்கு சென்றும் பார்வையிட்டு உண்மைத்தன்மையினை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்கள். குருந்தூர் மலையில் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,மற்றும் முன்னால் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர்பொதுமக்கள் என பலர் பிரசன்னமாகியிருந்தார்கள்.

தொல்பொருள் திணைக்கள பதில் பணிப்பாளர் உள்ளிட்ட அரச சட்டத்தரணிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றியல் அட்மிரல் சரத்வீரசேகர மற்றும் பௌத்த மதகுருமார்கள் பெரும்பான்னை மக்கள் என பலர் குருந்தூர் மலையில் பிரச்சனமாகி  இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments