குருந்தூர் மலை ஜயனாருக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி பாரிய பொங்கல்!

குருந்தூர் மலை விவகாரத்தில் ஆதி சிவன் ஜயனார் ஆலய வழங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் ஏற்கனவே நீதிமன்ற கட்டளையின் படி சைவ வழிபாடுகள் மேற்கொள்ளலம் என தெரிவிக்கப்பட்டதற்கு அமைய எதிர்வரும் 14.07.23 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக் குருந்தூர் மலை ஆதிசிவன் ஜயனார் இருந்த இடத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது இதில்அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் சைவ வழிபாட்டிற்கு நீதிமன்ற எந்த தடைகளும் ஏற்படுத்தவில்லை சட்டரீதியாக முழுமையான அனுமதியினை தந்துள்ளது இந்த நிலையில் குருந்தூர் மலையில் தமிழர்கள் வழிபாட்டினை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து முன்னால் வடமாகாணசபை உறு;ப்பினர் து.ரவிகரன்,முன்னால் விசாய அமைச்சர் க.சிவனேசன் வேலன் சுவாமி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

குருந்தூர் மலை தொடர்பான வழங்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்கள்

Tagged in :

Admin Avatar

More for you