Wednesday, April 30, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் சிறப்புற நடைபெற்ற கரும்புலிகள் தினம்!

முல்லைத்தீவில் சிறப்புற நடைபெற்ற கரும்புலிகள் தினம்!

முல்லைத்தீவில் தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் சிறப்புற நடைபெற்றுள்ளது.
தூயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வதற்கு பொலீசார்,புலானாய்வாளர்கள் தடைவித்துள்ள நிலையில் தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் முல்லை ஈசன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.

முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கரும்புலிகளின் பொது திருவுருவப்படம் வைக்கப்பட்டு படத்திற்கான பொதுச்சுடரினை தாயக விடுதலைப்போரில் நான்கு பிள்ளைகளை கொடுத்து அதில் ஓருபிள்ளை கரும்புலியாக மண்ணுக்கு வித்தான பிள்ளைகளை பெற்றெடுத்த தாயாரான புஸ்பராணி அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க தொடர்ந்து பொது திருவுருவப்படத்திற்கான சுடர்களை மூன்று மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றியதை தொடர்ந்து கரும்புலிகளின் பொது படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் நினைவுரைகளை தொடர்ந்து சிறப்புரையினை முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் நிகழ்தியுள்ளார்.

 அவர் உரையில்..
கரும்புலிகள் நாளில் கலந்து கொண்ட அனைவருக்கும் கரும்புலிகள் நினைவு சுமந்து தென்னங்கன்றுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

து.ரவிகரன் அவர்கள் பேசும் போது அன்னிய ஆதிக்கத்திற்குள் இருந்துகொண்டு நாங்கள் கரும்புலிகளை நினைவிற்கொள்கின்றோம் என்றால் அது எங்கள் உணர்வு அந்த உணர்வுடன் எங்கள் நிலம் காக்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இன்றும் நாங்கள் இயலக்கூடியவகையில் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

கரும்புலிகள் நாள் மதிக்கவேண்டியது பெறுமதியான நாள் எங்கள் வீரத்தினை உலகிற்கு காட்டியநாள்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments